Monday, October 5, 2009

சிகரங்களில் உறைகிறது காலம்

சமீபத்தில் வாசித்த கனிமொழியின் “சிகரங்களில் உறைகிறது காலம்” கவிதைத்தொகுப்பில் எனக்குப்பிடித்த கவிதை:

மேசையின் விளிம்பில்
வைக்கப்பட்டிருக்கும்
மெல்லிய கண்ணாடிக்
குவளையைப்போல் உள்ளது
நம்பிக்கை

விபரீதமான ஒரு தருணத்தை
எதிர்நோக்கிக்காத்திருக்கிறது
திரவம்

எங்கு வைத்தாலும் நகர்ந்து
விளிம்பில் உட்கார்ந்திருக்கிறது
குவளை
அவசரத்தில் எறியப்படும்
வார்த்தைகளையும்
நழுவி விழும் உண்மைகளையும்
அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்
எதிர்நோக்கி
சிதறிப்போதலை வேண்டியபடி
ஆனால்
என்றுமே காலியாய் இருப்பதில்லை மேசை.

2 comments:

  1. கார்த்திக்,

    புதுக்கவிதை என்பது கொஞ்சம் அலர்ஜியும் நிறைய அஜீரணமும் ஏற்படுத்துவதாய் இருக்கிறது எனக்கு. சுஜாதா சொல்வது போல், ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண நிறைய மெனக்கெடலும் பொறுமையும் தேவைபடுவதுடன், அந்த ப்ராசஸ் ஆயாசம் தரக்கூடியதும் கூட. அதிலும் புதுக்கவிதைகளில் இது இன்னும்அதிகம் . அவருக்குப்பின் அந்த முயற்சி ஏறத்தாழ நின்றுவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது. அம்மாதிரியான ஒரு முயற்சியில் நீங்கள் இறங்கியிருப்பது உங்கள் மனோதிடத்தை காட்டுகிறது. சுஜாதா விட்டு சென்ற அந்த பணியை தொடர்ந்து, முத்தெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்போது நீங்கள் எடுத்து வந்திருப்பது முத்தா என்று எனக்குத் தெரியவில்லை.

    ReplyDelete
  2. மூச்சடக்கி கடலிறங்கி முத்தெடுத்து மீண்டபின்
    மூச்சிறைப்பார் மூழ்கி முத்தெடுத்தார்- பேச்சின்றி
    மூச்சிறைப்பார் மூழ்காதும் முத்தறியாது யாரும்
    பேச்சுரைப்பார் உலகே காண்

    ReplyDelete