Wednesday, June 3, 2009

கம்பராமாயணம்

”ஓசை பெற்று உயர் பாற் கடல் உற்றுஒரு
பூசை முற்றவு நக்கு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றுஇக்
காசில் கொற்றத்து இராமன் கதையரோ”

அலைகளையுடைய பாற்கடல் முழுவதையும் ஒரு பூனை நக்கியே குடித்து வற்ற வைக்க நினைக்கும் பேராசையே நான் இராமனைப் பாடுவதும் என்று பாலகாண்டத்தில் ஆரம்பிக்கும் அற்புதமான உவமைகள் கம்பராமாயணம் முழுவதும் ஏராளமாக விரவிக்கிடக்கின்றன.
இவற்றில், நான் ரசித்த ஒரு உவமை கீழே:


”சிங்கக் குருளைக் கிடும் தீஞ்சுவை ஊனை
நாயின் வெங்கண் சிறு குட்
டனை ஊட்ட விரும்பினளே
நங்கைக்கு அறிவின் திறம்
நன்றிது,நன்றிது என்னாக்
கங்கைக்கு இறைவன்
கடக்கை புடைத்து நக்கான்”.

ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும், பரதன் முடிசூட வேண்டும் என்று கைகேயி தசரதனிடத்தில் வரம் கேட்கிறாள்.இவ்வரத்தைக்கேட்டு, தசரதன் இராமனிடம்,நீ கானகம் புகும்முன் நான் வானகம் புகுவேன் என்று புலம்புகிறான்.

இவ்வரத்தைக் கேட்ட இலக்குவன் சீறுவதாகக் கம்பன் வடித்துள்ளதே மேற்சொன்ன வரிகள்.இதன் அர்த்தம்,
”சிங்கக்குட்டி உண்ண வேண்டிய சுவையான மாமிசத்தை,கொடிய ஒரு சிறுநாய்க்குட்டிக்கு உணவாகப் போடுகிறாளே இந்த கைகேயி! நன்றாக இருக்கிறது,மிக மிக நன்றாக இருக்கிறது” எனக் கைகொட்டி சிரிக்கிறானாம்.

1 comment:

  1. கருத்தை கவர் கார்த்திக்,

    இந்த உவமை சிறு வயது முதலே என்னை கவர்ந்த ஒன்று, சற்று பழமையானது, எளியது என்பதை தவிர வேறு சில சிறப்புகளும் அருளாளர்கள் சொல்வர். உங்கள் உவமை கட்டுக்கு ஒத்து வரும்போல் இருந்தால் இதையும் எடுத்து ஆளவும்.


    ॐ त्रयम्बकं यजामहे सुगंधिम पुष्टिवर्धनम

    उर्वा-रुकमिव भंधानात मृत्योर-मुक्षीय माँ अम्रितात

    Om Trayambakam Yajamahe Sugandhim Pushtivardhanam

    Urva-rukamiva Bhandhanaat Mrityor-mukshiya ma amritat


    முக்கண்ணனை, நாற்றத்தின் நேரியனை, செல்வம் உயர்துவோனான உன்னை நான் வணங்குகிறேன் - ஐயா, எப்படி வெள்ளரி, கொடியிலிருந்து விலகுமோ அப்படி என்னையும் உலக பந்தங்களில் இருந்து விடுவித்து மோக்ஷம் தருவாய்

    பொதுவாக காய் கனியாகி விழும்போது கனிதான் கழன்று விழும், ஆனால் வெள்ளரியில் மட்டும் பழுக்கும்கால் பழம் அங்ஙனமே இருக்கும், கொடி நகர்ந்து / பிரிந்து / விட்டு விலகி செல்லும்

    ReplyDelete